செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அபிராமிபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இடுகாட்டுக்கு பொது வழி இல்லை. பல ஆண்டுகளாக தனி நபர் இடத்தை பாதையாக பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அந்த இடம் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளதால் இடுகாட்டுக்கு பொது பாதை வசதி இல்லை. ஆதிலட்சுமி என்பவர் இறந்த நிலையில், அவரது உடலை எடுத்துச் செல்ல முடியாததால், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுராந்தகம் போலீசார் சமரசம் செய்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது.