குன்றத்தூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியின் போது, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் நியாஸ் கான் என்பவரிடம் இருந்து 400 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அப்துல் சாபிக் என்பவரைப் பற்றி தகவல் கிடைத்தது. அவரைப் பிடித்த போலீசார், அவரிடமிருந்து மேலும் 1500 போதை மாத்திரைகள் மற்றும் 400 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.