செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொண்டமங்கலம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் கோவிந்தாபுரம் -- அனுமந்தபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையின் இருபுறமும் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் சாலையில் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி உள்ளது. மேலும் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது.