செங்கல்பட்டு வந்தது ஜூனியர் ஆக்கி உலகக் கோப்பைக்கு வரவேற்பு

1பார்த்தது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்தியா ஆக்கி கூட்டமைப்பு இணைந்து நடத்தும் ஆண்கள் ஜூனியர் ஆக்கி உலக கோப்பை போட்டிகள் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. கடந்த 10-ந் தேதி தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர், சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் உலக கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். அதன் தொடர் நிகழ்வாக, செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்திற்கு ஹாக்கி கோப்பை வருகை தந்தபோது, விளையாட்டுத்துறை இயக்குனர் மோகன கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சினேகா, சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் பங்கேற்று வரவேற்பு அளித்தனர். கோலாட்டம், சிலம்பாட்டம், மல்யுத்தம் போன்ற தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you