மாமல்லபுரத்தில், மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தனது இரு குழந்தைகளான லியா (7) மற்றும் சுபிக்ஷா (4) ஆகியோருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் விஷமருந்திய தந்தை பிரதீப் (35) உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாமல்லபுரம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.