செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து "கிளீன் செங்கை - 2026" என்ற மாபெரும் தூய்மை இயக்கம் மற்றும் நெகிழி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் நேற்று (மே. 25) கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் செங்கல்பட்டு எம்எல்ஏ தியாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் நோக்கம் மாவட்டம் தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.