காஞ்சி: பல்லவர் கால சிலைகள் கண்டுபிடிப்பு

229பார்த்தது
காஞ்சி: பல்லவர் கால சிலைகள் கண்டுபிடிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள ஆரியம்பாக்கம் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஊரின் வெளிப்புறத்தில் உள்ள குளத்தின் கரையில் கவனிப்பாரற்று கிடந்த 80 செ.மீ உயரமும், 42 செ.மீ அகலமும் கொண்ட விஷ்ணு துர்க்கை சிலை கண்டறியப்பட்டது. இந்த சிலை பல்லவர் காலமான 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் அன்பழகன் மற்றும் அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி