சென்னை குன்றத்தூர் அருகே உள்ள மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவின் முன்பகுதி அந்தரத்தில் தொங்கியது. முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.