செங்கல்பட்டில் 10 வயது சிறுமியை சீரழித்தவருக்கு 'ஆயுள்'

53பார்த்தது
செங்கல்பட்டில் 10 வயது சிறுமியை சீரழித்தவருக்கு 'ஆயுள்'
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, 2019ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், 41, என்பவர், சிறுமியை வீட்டிற்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர். 

இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் நடந்தது. வழக்கு விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நாகராஜுக்கு ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 4 லட்சம் ரூபாய், தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
Job Suitcase

Jobs near you