மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், சக்கரபாணி நகரைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஆதித்யா, மன அழுத்தத்தின் காரணமாக வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மவுலிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவன் ஆதித்யா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான்.