செங்கையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து ஒருநாள் பயிற்சி

76பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு தனியார் மண்டபத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பட்டியல் இன மக்கள் மற்றும் பட்டியலின பழங்குடியினர் ஆதிதிராவிடர் ஆகியோருக்கு சமூக நீதி மற்றும் சமத்துவ மையம் சார்பாக ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. 

இதில் பல்வேறு நிலையில் உள்ள சமூகத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மட்டுமல்லாமல் மலைவாழ் மக்கள் பழங்குடியின மக்கள் ஆகியோருக்கும் ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு நடத்தப்பெற்றது. இதில் கலந்துகொண்ட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் இந்த கூட்டத்தை துவக்கி வைப்பதற்காக நான் வரவில்லை. இந்த கூட்டம் எப்படி நடக்கிறது என்பது குறித்து அனைவருக்கும் புரிதல் ஏற்படுகிறதா என்ற கோணத்தில் நான் இந்த கருத்தரங்கிற்கு வந்து தற்போது கலந்து கொண்டேன். இதில் கருத்தரங்கு நடந்து கொண்டிருக்கும் காலை முதல் மதியம் வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

இக்கூட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் இங்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உங்களுக்கு தேவையான கேள்விகள் மற்றும் சட்ட ரீதியானவைகளை தெரிந்து கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி பேசினார். இக்கூட்டத்தில் சமூக பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் நரிக்குறவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு மணி மாலை அணிவித்து நன்றி கூறினார்கள்.
Job Suitcase

Jobs near you