காஞ்சிபுரம் மாவட்டம் சிறிபெரும்புதூர் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, வண்டலூர் -- வாலாஜாபாத் சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரு கடத்தில் மேம்பாலம் உள்ளது. வாலாஜாபாத், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்கள் இரவு, பகலாக சென்று வருகின்றன.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த மேம்பாலத்தின் இருபுறங்களிலும், அதிக அளவு மண் குவிந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலைத் தடுமாறி விபத்தில் சிக்கி வந்தனர். இதனால், மேம்பாலத்தின் மீது தேங்கியுள்ள மண் குவியலை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலத்தின் மீது இருந்த மண் குவியலை அகற்றி சீரமைத்தனர்.