செங்கல்பட்டு: குளத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை

70பார்த்தது
செங்கல்பட்டு: குளத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி, 19வது வார்டு திருக்கச்சூர் பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் பழமையான தியாகராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாத பிரதோஷம், சிவராத்திரி, பௌர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

கோவிலின் வலது புறத்தில் பழமையான குளம் உள்ளது. இந்த குளம் பாழடைந்து பாசி படிந்தும், குப்பை நிறைந்தும் காணப்படுகிறது. மேலும் நான்கு பக்க குளத்தில், இரண்டு பக்கம் மட்டுமே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு பக்கம் திறந்த நிலையில் உள்ளதால், குழந்தைகள் குளத்தின் அருகில் சென்று விளையாடும் அபாய நிலை உள்ளது. இதனால், குளத்தைச் சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி