செங்கல்பட்டு: மாமியார் வீட்டில் நகை, பணம் திருடிய மருமகன்

310பார்த்தது
மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சாந்தி (56) என்பவர், தனது மகள், மருமகன் தட்சிணாமூர்த்தி ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 22ம் தேதி, வீட்டின் பீரோவில் இருந்த 24 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் திருடு போனது. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சாந்தியின் மருமகன் தட்சிணாமூர்த்தி தனது தோழி தீபா (29) மற்றும் 17 வயது சிறுமியுடன் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.
Job Suitcase

Jobs near you