திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழா

349பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத கந்தசுவாமி திருக்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று (பிப்.21) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருத்தேரோட்டம் பிப்.27ம் தேதியும், திருக்கல்யாண வைபவம் மார்ச்.5ம் தேதியும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி