சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பெண் வழக்கறிஞர் ரோஜா என்பவர் பாத் டப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவருடன் விடுதி அறையில் தங்கியிருந்த ஆண் நண்பர் யஷ்வந்த்குமாரை விசாரணை செய்து வருகின்றனர். செல்போன் அழைப்புக்கு பதிலளிக்காததால் ஆண் நண்பர் விடுதிக்கு வந்து பார்த்தபோது ரோஜா இறந்து கிடந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.