சென்னை அருகே வங்கக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி வர வாய்ப்புள்ளது. தற்போது இது சென்னையில் இருந்து 50 கி. மீ. தூரத்தில் நகராமல் கடலில் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.