செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அருகே பெருமாள்சேரி கிராமத்தில் வசிக்கும் உமாபதி என்பவர் வளர்த்து வந்த 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், இன்று பவுஞ்சூர்-கூவத்தூர் நெடுஞ்சாலையில் மேய்ச்சலுக்குப் பிறகு பட்டியில் அடைக்க அழைத்துச் செல்லப்பட்டபோது, தட்டாம்பேடு கிராம சாலையில் சென்றுகொண்டிருந்த ஆடுகள் மீது கல்குவாரிக்குச் சென்ற கனரக லாரி மோதியது. இந்த கோர விபத்தில் 25க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். கூவத்தூர் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடுகளை நம்பி வாழ்வாதாரம் இருந்த உரிமையாளர் உமாபதி, என்ன செய்யப் போகிறேன் என கண்ணீர் மல்க வேதனையுடன் நிற்கிறார்.