செய்யூர் பகுதியில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால், பாலையார் மடம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், துரை, கண்ணாயிரம், சதீஷ் ஆகியோரின் நான்கு பசு மாடுகள், கைலாசநாதர் கோவில் அருகே அறுந்து கிடந்த மின்சார வயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து தகவல் அறிந்த செய்யூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கால்நடை மருத்துவரை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்தனர். இந்த துயரச் சம்பவம் மாடு உரிமையாளர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.