செங்கை: மாவட்டம் முழுவதும் 250 கேமராக்கள்

360பார்த்தது
செங்கை: மாவட்டம் முழுவதும் 250 கேமராக்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், காவல் நிலையங்களில் பொதுமக்கள் பிரச்சனைகளைக் கண்காணிக்கவும் 250 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல் கட்டுப்பாட்டு அறையை எஸ்பி சாய் பிரனித் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகங்கள் மற்றும் 20 காவல் நிலையங்கள் இதன் கீழ் செயல்படுகின்றன. 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கேமராக்கள் கண்காணிக்கப்படும் என எஸ்பி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி