செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி யாழினி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 487/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். இம்மாணவிக்கு தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் தா. மோ. அன்பரசன் பட்டாடை போர்த்தி, சாக்லேட் மாலை அணிவித்து நேற்று பாராட்டு தெரிவித்தார். மாணவியின் தாத்தா, திரைப்பட வசனகர்த்தாவும் பாடலாசிரியருமான கலைமாமணி கே. பி. அறிவானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.