காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சமூக ஆர்வலர் மைக்கேல் ராஜ் மற்றும்
திமுக மாவட்ட கவுன்சிலர் பால்ராஜ் இடையே முன்விரோதம் காரணமாக, பால்ராஜ் தரப்பினர் மைக்கேல் ராஜையும் அவருடன் வந்த தனுஷையும் கத்தி, கட்டைகளால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, மைக்கேல் ராஜ் ஆதரவாளர்கள் பால்ராஜ் மற்றும் அவரது தம்பி சகாயராஜை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (மே. 29) காலை நிகழ்ந்துள்ளது.