மாமல்லபுரத்தில் விபத்தில் காயமடைந்த முதியவர் பலி

75பார்த்தது
மாமல்லபுரத்தில் விபத்தில் காயமடைந்த முதியவர் பலி
சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அல்லிமுத்து, 64. ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று முன்தினம் ஆட்டோவில், மனைவி கஸ்துரி, 55, என்பவருடன் மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதியில், மாலை 6:30 மணியளவில் சென்றார். அப்போது, பின்னால் வந்த கார், ஆட்டோவில் மோதி, தம்பதி காயமடைந்தனர். அரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில், அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை 3:30 மணியளவில், அல்லிமுத்து இறந்தார். மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி