காஞ்சிபுரம் தாயார்குளம் எம்
. ஜி. ஆர். நகரில், கான்கிரீட்
உறையால் அமைக்கப்பட்ட, 10 அடி ஆழமுள்ள திறந்தவெளி மழைநீர் உறிஞ்சுகுழி உள்ளது. நேற்று (ஜூலை 30) காலை 11:30 மணியளவில், அப்பகுதியில் மேய்ச்சலுக்காக வந்த பசு ஒன்று, உறிஞ்சுகுழியில் தவறி விழுந்துவிட்டது. குழியில் இருந்து வெளியேற முடியாமல் பசு கத்தியது.
அக்கம் பக்கத்தினர் பசுவை மீட்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல்
தெரிவித்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படைக் குழுவினர் தாயார்குளம் பகுதிக்கு சென்றனர்.
மழைநீர் உறிஞ்சுகுழியில் விழுந்து வெளியேற முடியாமல் உயிருக்கு போராடிய நிலையில் சிக்கித் தவித்த பசுவை, அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பின் கயிறு வாயிலாக பசுவை உயிருடன் மீட்டனர்.