காஞ்சிபுரத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் வட்டாரப் போக்குவரத்துத் துறையின் வாகன தணிக்கையில் அரசு விதிகளை மீறிய 111 வாகனங்கள் கண்டறியப்பட்டன. அதிக பாரம் ஏற்றிச் சென்றவை, தாா்ப்பாய் போடாத மணல் லாரிகள், ஏா்ஹாரன் உபயோகித்தவை, ஓட்டுநா் உரிமம் புதுப்பிக்காதவை என விதிகளை மீறிய வாகன உரிமையாளா்களிடமிருந்து ரூ. 10,31,865 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்தரமேரூா் பகுதிகளில் இந்த சோதனைகள் நடைபெற்றன.