செங்கை: கிராம நத்தம் இடத்தில் கடை வைத்திருப்பவரின் மனு தள்ளுபடி

336பார்த்தது
செங்கை: கிராம நத்தம் இடத்தில் கடை வைத்திருப்பவரின் மனு தள்ளுபடி
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகாவில் கிராம நத்தம் நிலத்தில் கடை வைத்திருந்த செல்வகுமார் மீது வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து அவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நிலமற்ற ஏழைகளுக்கு வீடு கட்டவும், பொது பயன்பாட்டுக்கும் மட்டுமே கிராம நத்தம் நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன. எனவே, ஆக்கிரமித்து கடை வைத்த செல்வகுமாரின் மனுவை தள்ளுபடி செய்து ஹைகோர்ட் நேற்று உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி