காஞ்சிபுரம்: டெண்டர் விதிமீறல்; அதிகாரிகள் பணியிடை நீக்கம்

399பார்த்தது
காஞ்சிபுரம்: டெண்டர் விதிமீறல்; அதிகாரிகள் பணியிடை நீக்கம்
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான டெண்டர் விதிமுறைகளை மீறி நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மே 12 முதல் 19 வரை குறுகியகால டெண்டர் அறிவிக்கப்பட்ட நிலையில், 18ம் தேதி டெண்டர் உருவாக்கப்பட்டு 19ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, உதவி பொறியாளர் கயல்விழி ஆகியோர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி