குன்றத்தூரில் ரூ. 33. 41 லட்சத்தில் நலத்திட்ட உதவி

54பார்த்தது
குன்றத்தூரில் ரூ. 33. 41 லட்சத்தில் நலத்திட்ட உதவி
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். சிறு, குறு தொழில்துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, 90 மாற்றுத்திறனாளிகளுக்கு 33.41 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள், காது கேட்கும் கருவிகள், இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கினார். குன்றத்தூர் நகர் மன்ற தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி