கண்ணகி நகரில் குழந்தையை விற்ற பெற்றோர் உட்பட 6 பேர் கைது

1பார்த்தது
சென்னை கண்ணகி நகரில் வசிக்கும் ஸ்ரீதர்-வினிஷா தம்பதி, ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், தங்கள் 3 மாத பெண் குழந்தையை 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு திருவண்ணாமலையைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்றுள்ளனர். குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில், சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சரளா, ஸ்ரீதர், சுமதி, வினிஷா, ஸ்ரீஜா, சிவரஞ்சனி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையை திருவண்ணாமலையில் இருந்து மீட்டு அங்குள்ள குழந்தை நல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you