செங்கல்பட்டு: அதிகாரிகளை கண்டித்த ஆட்சியர்

4பார்த்தது
செங்கல்பட்டு: அதிகாரிகளை கண்டித்த ஆட்சியர்
செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கம் பகுதியில் சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மாலத்தி ஹெலன் நேற்று (மார்ச் 2) ஆய்வு செய்தார். 2024-ல் தொடங்கப்பட்ட இந்தப் பணிகள் 95% நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள 5% பணிகள் தாமதமாவதைக் கண்டு ஆட்சியர் அதிருப்தி தெரிவித்தார். "ஏன் இவ்வளவு நேரத்தை வீணடிக்கிறீர்கள்?" என்று அதிகாரிகளைக் கேட்ட ஆட்சியர், பணிகளை உடனடியாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி