சென்னை இ.சி.ஆர். கானத்தூர் அருகே வார இறுதி நாளைக் கொண்டாட வந்த ஐ.டி. பணியாளர்கள் குழுவில், கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மயூரி என்ற பெண் உயிரிழந்தார். கடலில் மாயமான ஜெய் என்பவரை போலீசார் மற்றும் மீனவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.