காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் மஹாலில் இன்று (நவ.8) மாலை நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வருகின்ற 11ம் தேதி செங்கல்பட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIRஐ எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.