செய்யூரில் கல்லுாரி மாணவி தற்கொலை

62பார்த்தது
செய்யூரில் கல்லுாரி மாணவி தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த தேவராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகள் குணஸ்ரீ, 19; தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் உறங்கினர். இரவு 11:30 மணியளவில் குணஸ்ரீ மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்ட குடும்பத்தினர் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குணஸ்ரீ விஷம் குடித்து இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். செய்யூர் போலீசார் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி