தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகத்தில் பத்தாம் மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் விருது வழங்கும் விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு டோக்கன் நிகழ்ச்சியாக இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிள்ளையார் சிலைக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்து விழாவை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஏராளமான மாணவ மாணவிகள் வந்து இருக்கின்றனர். அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.