சோழிங்கநல்லூர் அருகே கழிவறையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

417பார்த்தது
சோழிங்கநல்லூர் கோர்ட் அருகே அரசுக்கு சொந்தமான நடமாடும் கழிப்பறை ஒன்றில் மே. 22 இரவு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. தூய்மைப் பணியில் ஈடுபட்ட பெண்கள் அங்கு சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை கிடந்துள்ளது. இது குறித்து செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி