நீலாங்கரை பாண்டியன் நகரில் வசிக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த காவலாளி முனியம்மா (50) வீட்டில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகமது இஸ்தகின் (25) என்பவர், ஒரு மாதத்திற்கு முன் ஏற்பட்ட முன்விரோதத்தால், தூங்கிக் கொண்டிருந்த அவர் தலையில் சிமென்ட் கல்லைப்போட்டு தப்பினார். பலத்த காயமடைந்த முனியம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீலாங்கரை போலீசார் முகமது இஸ்தகினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.