மேல்மருவத்துார் அருகே மணி (48) என்பவர் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 4) உயிரிழந்தார். இந்த துயரச் செய்தியறிந்து அவரது தாய் அலமேலு (70) நள்ளிரவில் மருத்துவமனைக்குச் செல்ல முயன்றபோது, சென்னை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேல்மருவத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.