செங்கல்பட்டு மாவட்டம் கூவத்துார் அருகே கொடூர் கிராமத்தில் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட அர்ஜூன் (20), ஆகஸ்ட் 20 மதியம் நெல்வாய் பாளையம் செல்லும் சாலையோரத்தில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் மூழ்கிய அர்ஜூனின் சடலத்தை மீட்டனர். கூவத்துார் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.