சோழிங்கநல்லூர்: சிறுமி கர்ப்பம்.. இன்ஸ்டாகிராம் காதலன் மீது போக்சோ

314பார்த்தது
சோழிங்கநல்லூர்: சிறுமி கர்ப்பம்.. இன்ஸ்டாகிராம் காதலன் மீது போக்சோ
கொடுங்கையூரைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 18 வயது வாலிபருடன் பழகி கர்ப்பமானார். வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வீட்டில் ஆட்கள் இல்லாத போது அவரை அழைத்துச்சென்று காதலன் உல்லாசமாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி