செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கோவிலம்பாக்கம். இங்குள்ள, கோவிலம்பாக்கம்- எஸ். கொளத்தார் சாலையில், ஏராளமான கடைகள், அரசு, தனியார் பள்ளிகள், அங்கன்வாடி வளாகம், குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இந்நிலையில், கோவிலம்பாக்கம்- எஸ். கொளத்தார் சாலையையும், துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையையும் இணைக்கும் விநாயகபுரம் பிரதான சாலையில், கடந்த ஆண்டு, 15 அடி அகலத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைத்து, கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.