செங்கல்பட்டில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

0பார்த்தது
செங்கல்பட்டில் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த கீழக்கரணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் தப்பி ஓட முயன்ற இருவரை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, 1 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. பிடிபட்டவர்கள் கீழக்கரணை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (27) மற்றும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் குமார் (31) என தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி