தாம்பரம் போலீசாருக்கு 26 புதிய பைக்குகள்

53பார்த்தது
தாம்பரம் போலீசாருக்கு 26 புதிய பைக்குகள்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் போலீஸ் கமிஷனரேட்டு சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்துவதற்காக, 26 டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டன மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இதில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் பங்கேற்று, துணை கமிஷனர் அலுவலகத்தை திறந்து வைத்தார். 

தொடர்ந்து, டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்களை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.புதிதாக துவக்கி வைக்கப்பட்டுள்ள டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்கள், ஜி.எஸ்.டி நெடுஞ்சாலை, ஓ.எம்.ஆர் சாலை, இ.சி.ஆர் சாலை, ரேடியல் சாலைகள் மற்றும் பிற சாலைகளில் சுற்றிச் செல்ல பயன்படுத்தப்படும். ஒவ்வொரு வாகனத்திலும் சைரன், ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 

இரவு சுற்றிச்செல்லவும், நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து மார்ஷல்கள் 8 மணி நேர ஷிப்டுகளில் பணிபுரிவார்கள். நெரிசல் நேரங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். நெரிசலை சரிசெய்தல், விபத்து நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்தல், சாலைகளில் பழுதடைந்து நிற்கும் வாகனங்களை அகற்ற உதவுதல், பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் சீரான போக்குவரத்தை உறுதி செய்தல் ஆகியவை இவர்களின் பணிகளாகும்.

தொடர்புடைய செய்தி