750 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

2பார்த்தது
750 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது
சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் வெளிமாநிலங்களில் இருந்து குட்காவை மொத்தமாக கடத்தி வந்து விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், சுங்குவார்சத்திரம் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது, நிறுத்தப்பட்டிருந்த மினிவேனை சோதனை செய்ததில், மூட்டை மூட்டையாக சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 750 கிலோ குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெங்களூர் பகுதியிலிருந்து கடத்தி வந்ததாகக் கூறப்படும் இந்த குட்காவை போலீஸார் பறிமுதல் செய்து, எச்சூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (37) மற்றும் கௌதம் (25) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி