ஆட்டோ ஓட்டுநருக்கு வெட்டு 6 பேர் கும்பல் வெறிச்செயல்

2பார்த்தது
ஆட்டோ ஓட்டுநருக்கு வெட்டு 6 பேர் கும்பல் வெறிச்செயல்
திருத்தவேலி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அபிலாஷ், நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டு, கட்டையால் தாக்கிவிட்டு தப்பியோடினர். படுகாயமடைந்த அபிலாஷ் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அபிலாஷ் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என மணிமங்கலம் போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி