சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் காட்டாங்குளத்தூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அவருடன் வீட்டில் தங்கியிருந்த மாணவி, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றார். தனது பொருட்களைப் பெற்றுத்தர சந்தோஷை அணுகிய மாணவியின் வேண்டுகோளுக்கிணங்க, சந்தோஷ் சிலருடன் ஹரிஹரன் வீட்டிற்குச் சென்று அவரைத் தாக்கி, தங்கச் செயினைப் பறித்துச் சென்றார். ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், போலீசார் சந்தோஷ் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.