செங்கல்பட்டு: ஏரியில் கழிவு நீர் கலப்பு.. செத்து மிதக்கும் மீன்கள்

514பார்த்தது
செங்கல்பட்டு: ஏரியில் கழிவு நீர் கலப்பு.. செத்து மிதக்கும் மீன்கள்
நெடுங்குன்றம் ஊராட்சி, மப்பேடு - புத்துார் கிராமத்தில் உள்ள 35 ஏக்கர் தாங்கல் ஏரியில் கழிவுநீர் கலப்பதால், மீன்கள் கொத்துக் கொத்தாக செத்து மிதக்கின்றன. ஆறு மாதங்களுக்கு முன் தனியார் அமைப்பு சுத்தம் செய்த ஏரியில், தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை அமைப்பின் போது அமைக்கப்பட்ட கால்வாய் வழியாக கழிவுநீர் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏரி நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.