செங்கல்பட்டு அருகே, பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் வழக்கறிஞரின் மனைவிக்கு அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் தையல் போடப்பட்ட இடத்தில் ரத்தக்கட்டியும், இரண்டு வெள்ளை நிற நூல்களும் இருந்ததால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது வழக்கறிஞர் மருத்துவமனை முதல்வரிடம் புகார் அளித்துள்ளார். மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.