சென்னை: இளைஞரை துடைப்பத்தால் விரட்டியடித்த பெண்

0பார்த்தது
சென்னை: இளைஞரை துடைப்பத்தால் விரட்டியடித்த பெண்
சென்னை அடையாறு மேம்பாலம் அருகே, பணியில் இருந்த 50 வயது பெண் தூய்மைப் பணியாளரிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை, அந்தப் பெண் தனது கையில் இருந்த துடைப்பத்தால் கடுமையாகத் தாக்கி விரட்டியடித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துமீறிய இளைஞரை சிசிடிவி காட்சிகளை கொண்டு அடையாறு போலீசார் தேடி வருகின்றனர்.