செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே வாணியன்சாவடி பகுதியில் தார் ஜல்லி ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, தாழ்வாக இருந்த மின்சார கம்பியில் உரசியதில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லாரிக்குள் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.