ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்கல்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர் நடத்தி வந்த, கடந்த இரண்டு மாதங்களாகப் பூட்டியிருந்த தாபா ஹோட்டலில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்புற பகுதியில் பிடித்த தீ, உள்ளே இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வேகமாகப் பரவி ஹோட்டல் முழுவதும் எரிந்தது. தீயை அணைக்க ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையும் தீயணைப்புத் துறையினரும் விரைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.